நீதியமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த விளக்கம்

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து விளக்கமளித்துள்ளார் என்று ஜனாதிபதியின் பேச்சாளா் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த செயலணியை நியமிக்கும் நடவடிக்கையை நீதியமைச்சர் அறிந்திருக்கவில்லை என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளாா்.

நீதியமைச்சர் அலி சப்ரியும் இந்த செயலணி தொடர்பில் தமக்கு தெரியாது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தாா்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் பேராசிரியர் தயானந்த பண்டா, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேதா சிறிவர்தன, என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஸ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மரம்பே, எரந்த நவரத்ன, பானி வெவல, காலி உலமா சபையைச் சேர்ந்த மௌலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீல் ரகுமான் மற்றும் அஸீஸ் நிஸார்தீன் ஆகியோா் உள்ளடக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!