மக்கள் இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து அதனுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் -ஜனாதிபதி வலியுறுத்தல்

மக்கள் இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து அதனுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இயற்கையுடன் இணைந்து புதிய விவசாய புரட்சி தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

ஸ்கொட்லாந்து க்ளஸ்கோ நகரில் இடம்பெறும் கோப் 26 எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் நைட்ரஜன் மீள் கண்டுபிடிப்பு, காலநிலை மாற்றம் ஆரோக்கியமான பல்லுயிர் மற்றும் சுழற்சி பொருளாதாரத்திற்கான தீர்வு உட்பட நடவடிக்கை எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் நேற்று உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிககையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலையான அபிவிருத்தியே தனது அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பு ஆகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட தேசிய தீர்மானங்கள் அபிலாஷைகள் போன்வற்றில் இவை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகளை பயன்படுத்தி சுற்றாடலை அழிவடையச் செய்யாது விவசாய உற்பத்தியினை அதிகரிப்பதே தற்போது உள்ள சவாலாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்

சிறுநீரக நோய் இலங்கையில் பல தசாப்தங்களாக விவசாயிகள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

அதிகளவான இரசாயன உரப்பாவனை இதற்கு காரணியாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே இரசாயன பசளை இறக்குமதியினை குறைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோப் 26 மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இதற்கு அனைவரது ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் மக்களுக்கும் பூமிக்கும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!