சீன உர நிறுவனத்துக்கு கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான தடை நீதிமன்றத்தினால் மேலும் நீடிப்பு

சீன உர நிறுவனத்துக்கு கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான தடை நீதிமன்றத்தினால் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த சீன உர நிறுவனத்துக்கு கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உர நிறுவனத்தினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் காணப்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டதையடுத்து உரிய அதிகாரிகள் அதற்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றிருந்தனர்.

இதனை அடுத்து நாட்டின் அரச வங்கியொன்று சீன பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!