அமைச்சர் கெஹெலியவின் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) முன்வைத்த கோரிக்கை ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகரகமை அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவல் விஜித் குணசேகரவின் (vijith Gunasekara) பெயரை பரிந்துரைத்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி இந்த பரிந்துரையை ஏற்க மறுத்து நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து ஜனாதிபதி, மருத்துவர் சவீன் சேமகேவை (Saveen Semage) மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார்.

சவீன் சேமகே, இராணுவ வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

இதனிடையே வரையறுக்கப்பட்ட அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக மருத்துவர் டி.எஸ்.சமரசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!