மதுபானங்களுக்கான புதிய விலை அமுலுக்கு வந்தது..!

2022 ஆம் ஆண்டு வரவு செலவ திட்டத்திற்கு அமைவாக மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தேசிய உற்பத்தியிலான விசேட மதுபானம் ஒரு லீற்றருக்கான உற்பத்தி வரி 380 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து புதிய விலை 4 ஆயிரத்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்னஞ்சாராயம் ஒரு லீற்றருக்கான விலை 410 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து புதிய விலை 4 ஆயிரத்து 460 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் ஒரு லீற்றருக்கு 420 ரூபாய் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து 4 ஆயிரத்து 750 லரூபாவாக அமைந்துள்ளது.
இதேவேளை, 5 வீத செறிமானத்திற்கு குறைவான மதுபானங்கள்3 ஆயிரத்து 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, செறிமானம் 5 வீதத்திற்கு அதிகமான மதுபானங்கள் 3 ஆயிரத்து 450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கள்ளு மதுபானத்தினை தவிர உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏனைய மதுபானங்கள் ஒரு லீற்றருக்கு 100 ரூபாய் வரி அறவிடப்பட்டதனை தொடர்ந்து அதன் புதிய விலை 3300 ஆக அமைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவின் கையொப்பத்துடன் அமுலாகும் வகையில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!