நாட்டில் மூன்றாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை லட்சத்தை கடந்தது

நாட்டில் கோவிட் தொற்றுக்கான மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் இதுவரை மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 105,816 ஆகக் அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் பைசர் தடுப்பூசியின் முதலாம் தடுப்பூசியை 5,681 பேரும் இரண்டாம் தடுப்பூசியை 524 பேரும் செலுத்தியுள்ளனர்.

மேலும் சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை 2,107 பேரும், இரண்டாம் தடுப்பூசியை 9,489 பேரும் ஏற்றியுள்ளனர்.

அத்துடன் மொடெர்னா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை 54 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 8பேரும் ஏற்றியுள்ளனர்.

நாட்டில் நேற்றையதினம் 8,298பேர் பைசர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
இதன் அடிப்படையில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!