நிராகரிக்கப்பட்ட சீன உரம் மீள பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமா? விவசாய அமைச்சு விடுத்த அறிவிப்பு இதோ…!

சர்ச்சைக்குரிய சீன உரத்தினை மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனம் மீள பரிசோதனைகளை முன்னெடுத்தாலும், தாவர தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய நிராகரிக்கப்பட்ட குறித்த உரத் தொகையினை ஏற்றுக்கொள்ளமுடியாதென விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை அபாயம் மிகுந்த நுண்ணுயிர்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத் தொகையினை மூன்றாந் தரப்பொன்றின் ஊடாக மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவரை மேற்கோள்காட்டி நேற்றைய நாளில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விவசாய அமைச்சு குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!