உங்கள் தோல்விக்கு வழி வகுக்கப்போகிறது! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

2022ஆம் ஆண்டின் பாதீடு, பொய்யான புள்ளிவிபரங்களைக் காட்டி முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே இது இறுதியில் அரசாங்கத்தின் தோல்விக்கு வழிவகுக்கும். அத்துடன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினா் கயந்த கருணாதிலக்க, இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அரசாங்கத்தில் இன்று விடயங்களில் அனுபவம் கொண்ட எவரும் பேசுவதில்லை. மாறாக, பாதீடு தொடா்பாக, அரசாங்கத்துக்கு சலவைச் செய்பவா்களே, அரசாங்கம் சாா்பில் பேசுவதாக அவா் தொிவித்துள்ளாா்.

இலங்கைக்கு இன்று மத்திய வங்கியின் ஊடாக டொலா்கள் வருவதில்லை.
கறுப்புச்சந்தையின் ஊடாக வருகின்றன. தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதே அரசாங்கத்தின் முக்கியக் கொள்கையாக அமைந்துள்ளது.

பாதீட்டில் கொரோனா நிவாரண ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டபோது அரசாங்கத்தின் பின்வாிசை நாடாளுமன்ற உறுப்பினா் ஆரவாரம் செய்தனா்.

எனினும் முச்சக்கர வண்டி ஒட்டுநா்களுக்கு வருடம் ஒன்றுக்கு நிவாரணமாக 750 ரூபாவே கிடைக்கும்.

பாடசாலை வாகனங்களுக்கு வருடத்துக்கு 10ஆயிரமே கிடைக்கும். தனியாா் பேரூந்துகளுக்கு வருடம் ஒன்றுக்கு 75ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கும். எனவே இது எந்தளவு நட்டத்தை ஈடுசெய்யும் என்று அவா் கேள்வி எழுப்பினாா்

வாகன விபத்து ஏற்படும்போது விபத்தை ஏற்படுத்தியவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற யோசனையை கயந்த கருணாதிலக்க விமா்சித்தாா்.

அரசாங்கம் இன்று விளையாட்டைப் போன்று பணம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பணத்தை உள்ளுாா் அரசியல்வாதிகளுக்கு வழங்கி அதன் மூலம் தோ்தலில் வெற்றிப்பெற முயற்சிக்கிறது. எனினும் இந்த முறை அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாது என்றும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!