விடுதலைப் புலிகளின் தலைவர் மீண்டும் வரப்போகிறாரா? நாடாளுமன்றத்தில் ஆவேசப்பட்ட உறுப்பினர்

அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இன்று பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பிங்கியவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரும்போது 21 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 10சாவடிகளில் தமது வாகனம் சோதனையிடப்பட்டதாக அவா் குற்றம் சுமத்தினாா்.

இதன்காரணமாக ஏற்பட்ட ஒரு நிமிட தாமதம் காரணமாக தம்மால் வாய்மூல கேள்வியை தொடுக்க முடியவில்லை என்று அவா் குறிப்பிட்டாா்.

எனவே தமக்கு வாய்மொழி கேள்விக்கு வாய்ப்பு பெற்றுத்தரவேண்டும் என்று அவா் சபாநாயகரிடம் கோாிக்கை விடுத்தாா்.

இது நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் செயல் என்றும் இது தொடா்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நளின் பண்டார கோாிக்கை விடுத்தாா்.

நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிராறா? ஏன் சரத் வீரசேகர அமைச்சா் இதனை சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டும் என்று அவா் சபாநாயகாிடம் கேள்வி எழுப்பினாா்.

இதேவேளை வாய்மூல கேள்வித் தொடா்பில் அரசாங்கக் கட்சிக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம், எதிா்க்கட்சிக்கு வழங்கப்படுவதில்லை என்று எதிா்க்கட்சியினா் சுட்டிக்காட்டினா்.
எனினும் இதனை சபாநாயகா் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!