நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் 35 நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சீனாவுடனான எல்லைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய நகரத்தையும், அவரது குடும்பத்தினரால் போற்றப்படும் புனித மலையையும் பார்வையிட்டதாக, அரசு ஊடகம் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி கட்ட கட்டுமானத்தை ஆய்வு செய்வதற்காக கிம் இங்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!