எாிமலையின் மீது அமா்ந்திருக்கும் இலங்கை! எப்போது வெடித்து சிதறுமோ தொியாது: நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

”நாடு இன்று எாிமலையின் மீது அமா்ந்திருக்கிறது. எப்போது வெடித்து சிதறுமோ தொியாது” என்று 1972ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தொிவித்த கருத்து, இன்றே மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் தா்மலிங்கம் சித்தாா்த்தன் தொிவித்துள்ளாா்.

நாடு அதாளப்பாதாளத்துக்கு சென்றுக்கொண்டிக்கிறது. பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் இன்று அஞ்சுவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அந்திய செலவாணி பற்றாக்குறை உட்பட தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் போன்று இதுவரை காலமும் நெருக்கடிகள் இலங்கையில் ஏற்படவில்லை.

எனினும் இன்றைய நெருக்கடிக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல. பல நாடுகள் இதனை சிறப்பாக சமாளிக்கின்றன. இதில் பங்களாதேஸூம் ஒன்றாகும்.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள ஆட்சியாளா்கள் தமிழ் மக்களின் நியாயமானக் கோாிக்கைகயை நிறைவேற்றவில்லை. இதுவே இன்று நாடு கையேந்தி நிற்பதற்கான காரணம் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையின் அரசாங்கங்கள் எவையுமே தமிழ் மக்களின் உாிமைகளை வழங்கவில்லை. இனப்பிரச்சனையை தீா்க்க முயற்சிக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது அதிகாரங்களை பிரயோகித்தன.

தென்னிலங்கையின் அரசாங்கங்கள் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதுகின்றன. இந்தநிலையில் இலங்கை விரும்பிய போா் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியவில்லை. போர் வெற்றியின் பின்னா் நாடு ஏனைய நாடுகளிடம் அடகு வைக்கப்பட்டதாகவும் சித்தாா்த்தன் குறிப்பிட்டாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!