இந்த ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘சரின்’ என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

ஓம் ஷினிக்யோ, இந்து மற்றும் பௌத்த மத நம்பிக்கைகளை சேர்க்கும் ஆன்மீக குழுவாக 1980களில் தொடங்கப்பட்டது . இதற்கு அர்த்தம் ‘உச்சக்கட்ட உண்மை’ என்பதாகும்.

பின்னர், இதன் தலைவர் ஷோகோ அசஹரா தன்னை இயேசு என்று அறிவித்து கொண்டதோடு, புத்தருக்கு பிறகு “ஞான ஒளி பெற்றவர்” தன்னை அழைத்துக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!