கனடாவின் தென் பகுதியில் அதிகரித்த வெப்பம் காரணமாக 33 பேர் உயிரிழப்பு

கனடாவின் தென் பகுதியில் அதிகரித்த வெப்பம் காரணமாக 33 பேர் உயிரிழப்பு

கனடாவின் தென் பகுதி மாகாணமான கியூபெக்கில் (Quebec) இல் அதிகரித்த வெப்பம் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமையில் (29) இருந்து வெப்பக்காற்று வீசுவதாகவும் வெப்பநிலை 35 C ஐ எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 முதல் 80 வயதானவர்களே வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஏற்படும் மரணம் நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் பல தசாப்தங்களுக்கு பின்னர் இவ்வாறான அதிகரித்த வெப்பக்காற்று வீசுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகரித்த வெப்பத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அதிகளவு நீர் அருந்துமாறும் கூடாரங்களின் கீழ் தங்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெப்ப அதிகரிப்பானது மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்கள் தம்மை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!