தடுப்பூசி போடாதவர்களுக்கு இதுதான் கதி: தமிழக அரசு அதிரடி!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் ,கடைகள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம் மூலம் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தபட்டு வருகின்றன. வாரம் ஒருமுறை நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்திற்கு இரு முறை நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது. அதில் பொது இடங்கள் சந்தை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட் ,தியேட்டர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றில் தடுப்பது செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

இதுகுறித்து பள்ளி, கல்லூரி ,தியேட்டர்கள், மார்க்கெட் ,விளையாட்டு ,இதர பொழுதுபோக்குகளில் அவற்றின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு வருபவர்களிடம் உரிய சோதனை நடத்தி, அவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!