கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியை முடக்கும் தீர்மானமில்லை.-சுகாதார அமைச்சு

புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு பகுதியையும் முடக்குவதற்கு தற்போது தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதே சுகாதார அமைச்சின் முதல் நடவடிக்கையாகும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் ஆபத்து தொடர்பிலும், இதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உட்பட 5 மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனுமதிக்கப்படாத நிகழ்வுகளை முன்னெடுப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் ஒன்றுகூடல்களே சில பகுதிகளில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே இவ்வாறான ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுமானால் நாடு மீண்டும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!