மஹிந்த சமரசிங்க பதவி விலகத் தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பதவி ஏற்கவுள்ள நிலையிலே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!