இளைய சகோதரரான கோட்டாபயவுக்கு மூத்த சகோதரன் அமைச்சர் சமல் ராஜபக்ச கூறிய ஆலோசனை

இளைய சகோதரரான ஜனாதிபதிக்கு மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச அறிவுரை கூறிய பின்னரே பசளை பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்கட்சி கருதுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கருத்தை இன்று வெளியிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு ராஜபக்சா்களும் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் சமல் ராஜபக்ச போட்டியிட்டிருந்தால் அவரே ஜனாதிபதியாகியிருப்பார்.
இதன்போது பசளைப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நளின் பண்டார குறிப்பிட்டார்.

இந்தநிலையில் புத்தளத்தில் குளங்களை அமைக்க அரசாங்க அமைச்சருக்கு 15லட்சம் வழங்கவேண்டும் என்று ராஜாங்க அமைச்சர்கள் கூறியுள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்துமாறு நளின் பண்டார, சமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பதிலளித்த ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இவ்வாறான கருத்துக்களை தாம் கூறவில்லை என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜெயரத்னவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்புமாறு அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த, அமைச்சர் சமல் ராஜபக்ச, விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!