காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆஸ்திரேலியா-சவுதி அரேபியாவில் தமிழர்கள் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு உலக தமிழர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் விக்டோரியாவில் பாராளுமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஆண்கள்-பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

சவுதி அரேபியாவில் செந்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சவுதி அல்அசா மண்டலத்தில் நடந்த போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. #CauveryManagementBoard