மிகவும் மோசமான கட்டத்தில் இலங்கை – கடும் அதிர்ச்சியில் அரசாங்கம்

இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் கணிக்க முடியாத நிலையை எட்டும் எனவும் ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கும் பல செயற்பாடுகள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு மோசமான காலக்கட்டம் உருவாகியுள்ளதென ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் முன்னணி வர்த்தக நாமங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறானதொரு கடினமான பொருளாதார காலகட்டத்தை தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை. இதற்கு முன்னரான காலப்பகுதியில் நாட்டின் வர்த்தக இருப்பு முன்பை விட சிறப்பாக இருந்தது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, நாடு ஏற்றுமதி செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக இறக்குமதி செய்தது.

உலக கப்பல் மற்றும் சரக்கு விலைகள் தற்போது அதிகரித்துள்ளது. . சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்பும் போது, ​​வர்த்தகப் பற்றாக்குறை மாதத்திற்கு 10 பில்லியன் டொலர்களாகியுள்ளது. இன்று நாடு 4 பில்லியன் டொலர் கடனில் சிக்கித் தவிக்கிறது.

கடந்த காலங்களில் இலங்கை தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட வர்த்தக தடைகளினால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!