துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வர வேண்டும்!

அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபிக்க சர்வதேச விசாரணைக்கு வரவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முள்ளிவாய்க்காலில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் கொடுரூரமாக தாக்கியுள்ளனர். இதுவொரு மிருகத்தனமான தாக்குதல். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்துடைப்புக்காக கைது செய்யப்பட்ட 3 இராணுவ வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட பாரிய யுத்தக் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபிக்க சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வரவேண்டும். துணிவிருந்தால் வாருங்கள் எனவும் அவர் இதன்போது சவால் விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!