ஆளும் கட்சிக்குள் முரண்பாடு மஹிந்த ராஜபக்ச எடுத்த முடிவு!

ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் இன்றைய தினம் அலரி மாளிகையில் மாலை 6.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் விசேட கூட்டமொன்றை நடாத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மைத்திரி தரப்பு, விமல் தரப்பு, வாசுதேவ தரப்பு, உதய கம்மன்பில தரப்பு உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுக்கு இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!