கோவிட் தடுப்பூசிகளுக்கான காலாவதி காலம் நிர்ணயம்!

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது.
    
அதன்படி, கோவேக்சினுக்கு 12 மாதங்களும், கோவிஷீல்டுக்கு 9 மாதங்களும், ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு 6 மாதங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து மேற்கண்ட மாதங்கள்வரை அவற்றை பயன்படுத்தலாம். ஆனால், இந்த தடுப்பூசிகள், கொரோனாவில் இருந்து எத்தனை மாதங்கள் நம்மை பாதுகாக்கும் என்று இன்னும் கண்டறியப்படவில்லை.

பூஸ்டர் டோஸ் போட்டால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தொழில்நுட்ப நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!