ராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி!

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரின் இராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார் என்று அச்சபை அறிவித்துள்ளது. தற்போதைய உறுப்பினர்கள் மீது ஜனாதிபதி நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர்கள் சேவையில் தொடர்வதை அவர் விரும்புவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
    
இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்துக்கு, வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. தலைவர் சஞ்சய மொஹொத்தல, நிர்வாக சபை உறுப்பினர்களான ஹர்ஷ சுபசிங்க, கலாநிதி ஹர்ஷ கப்ரால் சஞ்சய குலதுங்க மற்றும் ஜயமின் பெல்பொல ஆகியோர் இராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதேவேளை, முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இலங்கை முதலீட்டுச் சபைக்கு பல அதிகாரிகளை மிக அதிக சம்பளத்தில் சேர்த்துக் கொண்டு அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக இலங்கை முதலீட்டுச் சபை அண்மையில் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழுவில் குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!