
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 186 எனும் விமானம் பாகிஸ்தான் நேரப்படி நண்பகல் 12 மணியளவில் லாஹுர் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விமானம் இன்று பிற்பகல் 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் sialkot பகுதியில் கடந்த 3 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் சடலம் விமான நிலையத்தில் வைத்து அவரது நெருங்கிய உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறித்த நபரின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை பாகிஸ்தானில் உள்ள வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மரணத்துக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சயீட் யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு முன்னுதாரணமான கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை மக்கள் பாகிஸ்தானிய நீதித்துறை தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,.
இதேவேளை, பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பில் அவர் இதனைக் கு றிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!