திடீரென வெளிநாடு செல்லும் கோட்டாபய – நாடு திரும்பும் வரை மகிந்த வசமாகும் பொறுப்புக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!