சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது –பசில் தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் டொலர் கையிருப்பு பிரச்சினை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடத்தக்களவு அமைச்சர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரினால் நிபந்தனைகளுக்கு உடன்பட நேரிடும் என மற்றுமொரு தரப்பு அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்ளாது நட்பு நாடுகளிடம் உதவி பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!