சுதந்திரக் கட்சியுடன் கூட்டு இல்லை – ஜேவிபி அதிரடி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி, அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்றும், தனியாகவே அரசியலில் ஈடுபடும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனதா விமுக்தி பெரமுனவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என நேற்று தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!