பொலிஸ் விசாரணைகளில் திருப்தியில்லை – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு

நாட்டில் இடம்பெறும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகும் நிலையில் அது தொடர்பில்  இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன சார்பில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில்  இரண்டு  முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நேற்று இலங்கை மனித உரிமைகள் விசாரணை ஆணைக் குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முறைப்பாட்டாளர்கள்  இதன்போது   குறித்த  விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்தனர்.

எரிவாயு  சிலிண்டர்கள் வெடிப்பு  
சம்பவங்கள்  காரணமாக 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும்,  முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையாகியிருந்த  ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்
நாட்டில் இதுவரை  பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய  அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறு  மனித உரிமைகள் ஆணைக் குழு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!