பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பிறகு பணத்தாள்களில் வரும் மாற்றங்கள் குறித்து வெளியான தகவல்!

பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பின்னர் நாட்டின் பணத்தாள்களில் (பவுண்டுகள்) என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் அரச பொறுப்புக்கு வருவார் என்றே அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் பட்சத்தில் நாட்டில் பயன்படுத்தப்படும் பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும்.
    
ஏனெனில் தற்போது மகாராணியின் முகமே அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் அரச பதவிக்கு வரும் பட்சத்தில் அவர் முகம் தான் பவுண்டுகளில் பதிக்கப்படும்.

பின்னர் பழைய நாணயங்கள், பணத்தாள்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, புதிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படும்.

பழைய நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேதமாகும் போது மெதுவாக புழக்கத்தில் இருந்து அகற்றப்படும், இருப்பினும் அவை ஒரு குறிப்பிட்ட திகதி வரை சட்டப்பூர்வமாக இருக்கும் (மகாராணி மறைவிற்கு பின்னரே இது உறுதிப்படுத்தப்படும்).

இந்த நாணய மாற்றங்கள் பிரித்தானியாவில் மட்டும் நிகழாது. கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளின் நாணயங்களிலும் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!