திருப்பதிக்கு இலவசப் பயணத்தை ஒழுங்கு செய்த இந்திய நண்பர்!

பிரதமர் மகிந்தவின் திருப்பதி பயண விவகாரம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கடந்த 23 ஆம் திகதி புனித யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது.
    
இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் திருப்பதி பயணத்துக்காக அவரின் நண்பர் ஒருவர் இலவசமாக விமானத்தை வழங்கியதாக மகிந்தவின் மகனும் அவரின் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்க்ச தெரிவித்துள்ளார்.

“பிரதமரின் நண்பர் ஒருவர், திருப்பதிக்குப் பயணம் செய்ய அவருக்கு அந்த விமானத்தை இலவசமாகக் கொடுத்தார். அந்த நபரின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரதமரின் நண்பர்,இது நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!