நாட்டில் இன்று முதல் பொதுச்சேவை நடவடிக்கைகள் வழமைக்கு

நாட்டில் இன்று  முதல்  பொதுச்சேவை நடவடிக்கைகளை  வழமையான முறையில்  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக   பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்  ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளாா்.

இதேவேளை விவசாயம், கைத்தொழில், வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்கென அரசாங்கம் பாரியளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளதுடன், அவற்றை சிறப்பாக நிர்வகிப்பதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்

இதன்படி  அரச ஊழியர்கள்  இன்று முதல் வழமை போன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு  சந்தர்ப்பங்களில் பொது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமைக்கு  அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!