கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கும் தயார்…!

கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனை செய்ய தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்கசபையினால் ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண  விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை எதிர்கொண்ட தடைகளைத் தாண்டி, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் வரலாற்றில் இந்த நாட்டின் அடிப்படை கலாச்சாரத்துடன் அமைதியுடனும் இணக்கத்துடனும் வாழ்வதற்கும், அவர்களின் மத மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாத்து கௌரவத்துடன் வாழ்வதற்குமான அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள உரிமையை தான் எப்போதும் நிலைநாட்டுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!