பஞ்சத்துக்குக் காரணம் ஜனாதிபதியே!

இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப் போவதற்குக் காரணம் என்று ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
    
இரசாயன உரங்களுக்கு தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப் போவதற்கானப் பிரதான காரணம். ஜனாதிபதியின் இத்தீர்மானத்துக்கு எதிராக அப்போது அமைச்சரவையில் இருந்த ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

நாட்டின் சில பிரச்சினைகளுக்குக் கொரோனா வைரஸ் காரணமில்லை. ஜனாதிபதியின் தவறான தீர்மானம், தவறுகள், தனது குறைகளை ஏற்றுக்கொள்ளாமை, குடும்ப ஆட்சியே உள்ளிட்டவையே பிரதான காரணம். முன்பொருபோதும் இல்லாத பாரிய பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!