சொகுசு கப்பலில் வந்த 2000 பயணிகளில் 66 பேருக்கு கொரோனா!

மும்பையில் இருந்து 1471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கப்பல் கோவாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
    
இதனையடுத்து, கப்பலில் உள்ள 1,471 பயணிகள், 595 ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கப்பல் வாஸ்கோவில் உள்ள மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள 2,000 பேரும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து கப்பல் ஏஜெண்ட் ஜெஎம். பாக்சி கூறுகையில், கப்பல் மருத்துவரிடம் இருந்து ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியான தகவல் தெரிய வந்தது. கப்பல் கோவா கடலிலேயே நிறுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியானதில் கப்பலில் இருந்த 66 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது என்றார்.

இதனால், கப்பலில் இருந்த பயணிகளை வெளியேற்றுவது பற்றிய முறையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொள்ளும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!