மாற்று வழிகள் எதுவும் இல்லை! சைக்களில் பயணிக்கும் நிலை – எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் பகிரங்கம்

ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

ஆபத்து இருக்கின்ற போதிலும் அது உடனடியாக ஏற்படாது எனவும் எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாது போனால், இந்த நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவைக்கு பல முறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மாற்று வழிகள் இருந்த போதிலும் எரிபொருளை இறக்குமதி செய்ய அப்படியான மாற்று வழிமுறைகள் இல்லை.

எரிபொருள் விநியோகம் ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டால், சைக்கிளில் செல்லும் தூரம் வரை மாத்திரமே மக்களால் பயணிக்க நேரிடும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே எரிசக்தி அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!