நாளை கொழும்பு வருகிறார் வாங் யி!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நாளை இலங்கை வருகின்றார். கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயத்தையடுத்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் முக்கிய பல சந்திப்புகளில் ஈடுப்படவுள்ளார்.
    
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை அவர் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விசேடமாக கவனம் செலுத்துவார் என்பதுடன் , கடன் தவனை சலுகை அல்லது மேலதிக கடன் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை சர்வதேச கடன் சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம் கடன் நிவாரணத்திற்கான இணக்கப்பாட்டை நோக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!