மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலிருந்து நீக்குமா சீனா? முடிவு என்ன?

சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்ட சேதன பசளைகளுக்கான நாணயக்கடிதக் கொடுப்பனவை இலங்கை மக்கள் வங்கி செலுத்தியுள்ள போதும், சீனத் தூ தரகம், இன்னும் மக்கள் வங்கியை தமது கறுப்புப்பட்டியிலில் இருந்து நீக்கவில்லை.

இது தொடர்பில் சீனத் துாதரகத்துடன் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்டது.
எனினும் உரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை

எனினும் எமது கேள்விக்கு பதிலளித்த மக்கள் வங்கியின் முகாமை, தமது பொறுப்பாக இருந்த விடயத்தை தாம் நிறைவேற்றிவிட்டதாக குறிப்பிட்டது.

நாணயக்கடிதத்துக்கான 6.7 மில்லியன் டொலர் கொடுப்பனவை, குறித்த சீன நிறுவனத்துக்கு தாம் செலுத்திவிட்டதாக மக்கள் வங்கியின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பில் சீன தூதரகத்தின் நிலைப்பாட்டை தமது முகாமை எதிர்பார்ப்பதாகவும் மக்கள் வங்கியின் முகாமை எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!