கனடாவின் கோடீஸ்வர விளையாட்டு வீராங்கனை திடீர் மரணம்!

கனடாவை சேர்ந்த கோடீஸ்வர பேஸ்பால் விளையாட்டு வீராங்கனை அமண்டா அசய் குறைந்த வயதில் உயிரிழந்துள்ளார். 33 வயதான அமண்டா கடந்த 1988ஆம் ஆண்டு பிரிட்டீஷ் கொலம்பியாவில் பிறந்தார். சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.
    
அதன்படி பேஸ்பால் மற்றும் ஹாக்கியில் சிறந்து விளங்கினார். கனேடிய தேசிய பேஸ்பால் அணியில் தனது 17 வது வயதில் கடந்த 2005ஆம் ஆண்டு அமண்டா இணைந்தார்.

இதனை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் அணிக்காக தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்தார். அதே போல ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற அமண்டா விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அமண்டாவின் நிகர சொத்து மதிப்பு இலங்கை மதிப்பில் 10,13,38,600.00 ஆகும்.
அமண்டா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை நம்மை விட்டு சீக்கிரம் பிரிந்து சென்றுவிட்டார் என பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!