
அத்துடன், Tonga தீவின் பிரதான விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகள் எரிமலை சாம்பலினால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்த நிலையில் தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள Tonga தீவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்புக்குள்ளானமமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் ஆகியவற்றினால் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவர்களில் உள்நாட்டு பிரஜைகள் மூவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Tonga தீவுக்கு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கப்பல்களை அனுப்பியுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!