சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் டொன் அரிசி இலங்கைக்கு

சீனா ஒரு மில்லியன் மெற்றிக் டொன் அரிசியினை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் மற்றும் அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த தொகை அரிசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே  அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கு இலங்கை இடமளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நெல் அறுவடை 20 முதல் 25 வீதத்தினால் குறைவடையுமென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதனை எதிர்கொள்வதற்கு மாற்று வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!