உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிடுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி, உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    
மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 66 சதவிகித பேர் ஆதரவுடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் 43 சதவிகிதம் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் ஆதரவை பெற்று 13-வது இடத்தில் (கடைசி இடம்) உள்ளார்.

தி மார்னிங் கன்சல்ட் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 84 சதவிகிதம் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மே மாதத்தில் 63 சதவிகிதமாக சரிந்து, தற்போது 71 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!