நடுவானில் பற்றி எரிந்த ஏர் பிரான்ஸ் விமானம்: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று.

அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்.

    
உடனடியாக, விமானிகள் விமானத்தைத் திருப்பி புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்கள்.

விமானிகள் பத்திரமாக விமானத்தைத் தரையிறக்கியதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 48 பயணிகளும் உயிர் பிழைத்துள்ளார்கள். ஆனாலும், அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஞ்சினில் தீப்பிடித்ததாக ஏர் பிரான்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!