மின்தடை தவிர்க்க முடியாதது!

நாட்டில் மின்பாவனைக்கான கேள்வி மற்றும் மின் விநியோகத்திற்கிடையில் 300 மெகாவாட் இடைவெளி காணப்படுகின்ற நிலையில் அதனை பெற்றுக்கொள்ள மின்சார சபை முறையான திட்டங்களை செயற்படுத்தவில்லை. பொது காரணிகளை கருத்திற் கொண்டு மின்விநியோகத்தை தடை செய்ய நேரிடலாம் என வலுசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
    
இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதால் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டிய தேவை கிடையாது என மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

வலுசக்தி துறை அமைச்சின் கடமைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் காணப்படும் டொலர் பிரச்சினையினை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். மின்சார சபையில் செலவில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுமாயின் வலுசக்தி அமைச்சு என்ற வகையில் மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை களஞ்சியபடுத்தி தேவையான போது இலவசமாக விநியோகிக்க தயாராகவுள்ளோம்.

போக்குவரத்து மற்றும் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் பொறுப்பு வலுசக்தி அமைச்சுக்கு மாத்திரம் காணப்படுகிறது என்பதை உரிய தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் மின்பாவனைக்கான கேள்வி மற்றும் மின்விநியோகத்திற்கிடையில் 300 மெகாவாட் இடைவெளி காணப்படுகிறது.இதனை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை மின்சார சபை முறையான திட்டங்களை வகுக்கவில்லை.இவ்வாறான காரணிகளை கருத்திக் கொண்டு இம்மாதம் முதல் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் .

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி அல்லது மார்ச் மாதத்தின் ஆரம்ப பகுதியில் நாடுதழுவிய ரீதியில் கட்டாயம் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும்.

அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் எரிபொருள் மற்றும் மின்விநியோகம் கட்டமைப்பில் காணப்படும் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மின்பாவனைக்காக கேள்வி 8 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வலுசக்தி விநியோக கட்டமைப்பிற்கு புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையிலான காணப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக அதிக மின்னுபத்தி செய்யப்படுகிறது.

எரிபொருளை பெற்றுக் கொள்ளலில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை, நீர்மின் உற்பத்தி பாதிப்பு ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு இம்மாதம் நடுப்பகுதி அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்ப பகுதியில் நாடுதழுவிய ரீதியில் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!