சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் மக்கள் அசமந்த போக்கு

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் கூடிய அக்கறை செலுத்தாத நிலைமையே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் முன்னர் காணப்பட்ட ஆர்வம் மக்கள் மத்தியில் தற்போது குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாமையே இதற்கு காரணமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தற்போதைய நிலையில், கொரோனா தொற்றின் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணைக்கை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகள் முறையாக பின்பற்றாமை மற்றும் தடுப்பூ திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாரமயே இதற்கு காரணமாகுமெனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகள் முறையாக பின்னபற்றப்படுவதில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முககவசம் அணிவது மாத்திரமே தற்போது கடைப்பிடிக்கப்படுவதாகவும், அதனை தாண்டிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் கொரோனா தொற்றின் பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என்பதுடன், முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட வேண்டிய நிலையும் ஏற்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!