தலைமறைவான பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர்? – தீவிர விசாரணையில் பொலிசார்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக சவுதா மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது பயந்து கடலூரில் அவர் பதுங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை இடிக்கவில்லை என்று மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார்.
    
அந்த வீடியோவை பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரும், பாஜக செயற்குழு உறுப்பினராகவும் உள்ள சவுதா மணி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுகுறித்து சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் புகார் என்பதால் இந்த வழக்கு சென்னை மாநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சவுதா மணி மீது சைபர் க்ரைம் பொலிசார் கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சவுதா மணி கைதுக்கு பயந்து கடலூரில் பதுங்கியுள்ளாரா என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!