நாட்டை மீண்டும் முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்க நேரிடும்

நாட்டை மீண்டும் முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்க நேரிடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முடக்க நிலை என்பது உலக அளவில் தோல்வியடைந்த ஓர் செயன்முறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு தற்பொழுதுள்ள நிலையில் முடக்க நிலை அமுல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்களப் பணியாளர்கள் என்ற ரீதியில் முடக்க நிலையை மீளவும் அறிவித்தால் கோவிட் பெருந்தொற்றினால் மரணிப்போரின் எண்ணிக்கையை விடவும் பட்டினியால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை இயல்பு நிலையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பு அனைவரையும் சார்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!