இரயில்வே திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை

இரயில்வே திணைக்களத்தில் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரயில்வே ஊழியர்கள் குறித்து மீள்பரிசீலனை செய்யப்படவில்லை என இரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்துறையின் மேற்பார்வையில் அரச நிறுவனங்கள் மற்றும் துறைகளின் பணியாளர்கள் தொடர்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்ற போதும், இரயில்வே துறையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீளாய்வு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இரயில்வே திணைக்களத்தில் 13 ஆயிரம் பணியாளர்கள் காணப்படுகின்ற போதும், குறிப்பிட்ட சில இரயில் நிலையங்களில் தொடர்ந்தும் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இரயில் நிலைய அதிபர்கள் தேவை குறித்து மீளாய்வு செய்யப்பட்டு 15 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும் இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை என இரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர மேலும்  தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!