சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணிக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித்!

சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
    
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. மற்றும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பணியாற்றிய இருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அசாதாரண முறையில் இவ்விருவரையும் கைது செய்தமை, ஆகிய காரணங்களை அடிப்படையாக வைத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பில், கொழும்பு பேராயர் ஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் வணக்கத்துக்குரிய சிறில் காமினி பெர்ணான்டோ கருத்துரைக்கையில், சுதந்திர தினத்தை யொட்டி, நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் சுதந்திர தின பூஜை வழிபாடுகள் இடம்பெறும். சுதந்திரதின அரச வைபவத்தில், ஆண்டகையின் பிரதிநிதியொருவர் பங்கேற்பார் என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!