தீவிரமடையும் ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்!

இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் சர்ச்சை குறித்து இந்திய தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai), இந்திய மாநிலம் கர்நாடகாவில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
    
பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது திகிலூட்டும் செயல் என்று மலாலா யூசுப்சாய் கூறினார். குறைவாக அணிந்தாலும் சரி கூடுதலாக அணிந்தாலும் சரி, பெண்கள் மட்டும் ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கல்வி பற்றி பேசியதற்காக 2012-ல் பாகிஸ்தானில் தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லீம் மாணவி ஒருவர் படிப்பு மற்றும் ஹிஜாப் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறினார்.

இதனால், இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!