முன்னாள் பிரதம நீதியரசரின் தீர்ப்புகளை ரத்துச் செய்ய வேண்டும்!

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்போதைய பிரதம நீதியரசரால் வழங்கப்பட்ட அனைத்துத் தீர்ப்புகளையும் இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் எம்.பியுமான லக்‌ஷமன் கிரியெல்ல, தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
    
பாராளுமன்றத்தின் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
2015ஆம் ஆண்டு எங்களது ஆட்சியமைந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் பிரதம நீதியரசர் “நீங்கள் சொல்வது போல நீதிமன்ற தீர்ப்புக்களை வழங்குகிறேன். என்னைப் பதவியில் இருந்து விலக்க வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

இது உண்மையில் வெட்கத்துக்குரிய செயற்பாடு. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரதம நீதியரசர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!